மருத்துவ விடுப்பு விண்ணப்பம் PDF | Maruthuva Viduppu Vinnappa Padivam

Maruthuva Viduppu Vinnappa Padivam

Tamilnadu Business, Health, <a href=Home Improvement Tips and Employment News" width="390" height="182" />

மருத்துவ விடுப்பு விண்ணப்பம் | Medical Leave Form PDF in Tamil

நண்பர்களுக்கு வணக்கம்.. எங்களது பொதுநலம்.காம் பதிவினை பார்வை இடத்திற்கு மிகவும் மகிழ்ச்சி. பொதுவாக வேலைபார்க்கும் நபர்கள் உடல் நல கோளாறு அல்லது ஏதாவது ஒரு முக்கியமான விஷயத்திற்க்காக விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டும். ஒரு நாள் இரண்டு நல்லாள் அப்படியென்றால் பரவாயில்லை என்று சொல்லலாம். ஆனால் 10 நாள் 15 நாட்கள் விடுப்பு எடுக்க வேண்டும் என்றால். கட்டாயம் அதற்கு நாம் மெடிக்கல் லீவ் எடுத்தால் மட்டுமே. மேலதிகாரிகள் அந்த விடுப்பை ஏற்றுக்கொள்வர். ஆகவே இன்றைய பதிவில் அரசு ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுக்க உதவு வகையில் இங்கு மருத்துவ விடுப்பு விண்ணப்பம் pdf (maruthuva viduppu vinnappa padivam) மூலம் பதிவு செய்துள்ளோம். நீங்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றால் உடனடியாக கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோடு செய்துகொள்ளுங்கள் நன்றி.

மருத்துவ விடுப்பு விண்ணப்பம் pdf:

Maruthuva Viduppu Vinnappa Padivam Download Here

மருத்துவ விடுப்பு புதிய நிபந்தனைகள்.

மருத்துவச் சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு (Medical Leave) – திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண். 6. பணியாளர் துறை. நாள். 22.01.2021ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்..

1. விடுப்பு அனுபவிக்கும் நாளிலிருந்து ஏழு நாள்களுக்குள் விடுப்புக்கான விண்ணப்பம் அளிக்கப்பட வேண்டும்.

2. “A” மற்றும் “B” பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் அதற்கு மேலும் அல்லது Level 13ம் அதற்கு மேலும் உள்ளவர்கள்) அரசு மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.

3. “C” மற்றும் “D” பிரிவு ஆசிரியர்/ அரசூழியர்கள் (அதாவது தர ஊதியம் ரூ. 4400ம் குறைவாக அல்லது Level 12 வரை உள்ளவர்கள்) மருத்துவக் கவுன்சிலில் பதிவு பெற்ற மருத்துவரிடம் சான்று பெற வேண்டும்.

4. விண்ணப்பம் பெறப்பட்ட மூன்று தினங்களுக்குள் தேவைப்படின் மருத்துவக் குழுவிற்கு அனுப்பிட வேண்டும்.

5. மருத்துவக் குழுவுக்கு அனுப்பிடும் நேர்வில், அக்குழு வழங்கும் தகுதிச் சான்றின் அடிப்படையில் பணியில் சேர தவறும் பட்சத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் நடத்தை விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு,மருத்துவக் குழு அனுமதித்த நாள்கள் தவிர்த்து மீதியுள்ள நாள்கள் பிற தகுதியுள்ள விடுப்பாக கணக்கில் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுப்பு விண்ணப்பம் எழுதும் முறை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information In Tamil